Search This Blog

Monday, June 2, 2014

அழகான உறவுகள்,அவர்களின் நினைவுகள் ஏற்படுத்தும் உணர்வுகள் இன்னும் அழகானவை.

1999ல் ஊர் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறும்

ஊரே அய்யனார் கோவிலில் தான் இருந்தது. வழக்கம் போலவே நான் தூங்கியிருந்தேன். என் வீட்டின் கதவை தட்டும் சத்தம் அறிந்து, யாரு என்று கேட்டுகொண்டே திறந்ததும், என் பக்கத்துக்கு வீட்டு பாட்டி ஒரு பெண்ணுடன் வாசலில்
" தம்பி உன் தங்கச்சி இருந்தா , என் பேத்திய கோவிலுக்கு கூட்டிட்டு போ சொல்லுப்பா, இவ அம்மா முன்னாடியே போய்ட்டா"
" தெருவே ஒரே இருட்டா இருக்கு, போறதுக்கு பயப்படறா"
என்னை தவிர்த்து வீட்டில் யாரும் இல்லை. அந்த பெண்ணும் வெளியூர் போல் தெரிந்தது , திருவிழாவிற்கிறென வந்தவள்.நாமே போகலாம் என நினைத்து, பாட்டியிடம் " பாட்டி நீங்க வீட்டுக்கு போங்க, எங்க பாப்பாவ கூட போக சொல்றேன்".
பாட்டி சென்றதும் அந்த பெண்ணிடம் " சாரிங்க எங்க பாப்பாவும் முன்னாடியே கோவிலுக்கு சாமி பாக்க போய்ட்டா, நான் கொண்டு வந்து விடுறன்"
அவளும் சிரித்துக் கொண்டே
" போன மாசம் உங்களுக்கு அம்மை போட்டுச்சுன்னு என் அம்மா சொன்னாங்க , இப்ப சரியாகிடுச்சா"
அவளிடம் " உங்க பேரு, சத்யா தானே"
அவளும் புருவம் உயர்த்தி "மறக்கல போல இன்னும், சந்தோசமா இருக்கு"
எண்ணங்கள் பின்னோக்கி என்னை இழுத்து போனது, சிறு வயது முதல் திருவிழா என்றால் என் ஊரு வந்து விடும் அவர்களது மொத்த சொந்தமும்.அப்போதெல்லாம் அவளுடன் நட்பு இருந்திருக்கிறது. இப்போது அவளின் மாற்றம் அவளின் அடையாளமே மாறிபோய் விட்டது.
நடக்க தொடங்கினோம், நிலவு என் இடது புறமும், நிலவுக்கு போட்டி போட்டு அவள் என் வலது புறமுமாய் நடந்தோம்.
அவள் வலது கைகளை காட்டி
" உங்க புக்ஸ் எடுத்து நான் பாத்தப்போ, உங்க கையில இருந்த கம்பியால அடிச்ச காயம் இது. இன்னும் தழும்பு அப்டியே இருக்கு, அவ்வளவு கோபம் உங்களுக்கு"
அவள் கைகளை பிடித்து கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.
" மன்னிசுடுங்க தெரியாம பண்ணிருப்பேன் "
" அதெல்லாம் ஒன்னும் வேணாம், "

தொடரும்...

Monday, February 14, 2011

காதலர் தினம்


நான்  உன்னிடம்
தந்த
காதல் சொல்லே இடம் பெறாத
எல்லா வாழ்த்து அட்டைகளிலும்,
ஓரமாக என்
காதல்
ஓட்டப் பட்டிருக்கும் .

Tuesday, November 23, 2010



நீ
உறங்கும்
நேரம்
பார்த்து தான்
சாமி கூட
உலா போகிறது



நான்
கவிதைக்காக
தேடின வார்த்தைகளெல்லாம்
எடுத்தது என்னவோ
நீ
குப்பையில்
கசக்கிப்போட்ட
காகிதத்தில்
கிடைத்தவைகள் தாம்..



நீ உன்
தோழிகளுக்கென
அனுப்பும்
எந்த கடிதமும்
சரியாக போய்ச்சேர்வதில்லை
என்று
சொல்வாய்,

உன்னை விட்டுச் செல்ல
யாருக்குத்தான் மனம் வரும்

ஏலம்

உன்
தோழி வீட்டிலிருக்கும்
உன்னை
அழைக்க
உன் பெயரை
ஏலம் விடும்
உன் தாய்

பேருந்தில்
உன்
சிரிப்புக்கு
பயணச்சீட்டுப் போக
மீதம் சில்லறை
கொடுத்துப் போகும்
நடத்துனர்..

மண்வாசம்




மழை இல்லை
ஆனால்
வீதியெங்கும் மண்வாசம்
உன்
காலடி
பட்டதில்

Monday, November 22, 2010

என் கவிதை





முதல் பக்கம்
என் பெயர்
எழுதப்பட்ட
புத்தகம்
நீ
நீ
பேருந்தின்
முன்பக்க படிக்கட்டுகளில்
ஏறும்போது மட்டும்,
பின்பக்கமாக
ஏறும் நான்
என்
இதயம்
இடப்பக்கம் இருப்பதை
உணர்ந்துக்கொள்கிறேன்..

Wednesday, October 6, 2010

அம்மா


என் விரல்
பிடித்து
நடை கற்றுக்கொடுத்தாள்
இன்று
அந்த விரல்களால்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்

நட்பில்


நாம்
இருவரும்
பேசிக்கொண்டிருக்கும்
இரவுகளில்
முதலாவதாக நீ
உறங்கியிருப்பாய்
என் அறைக்குச்செல்ல
நான்
எழும்போது
என் பெயர்ச்சொல்லி
அழைப்பாய்
உரைந்துப்போய் நிற்பேன்
உன் நட்பில்...

சுவாசம்


நீ
என் சுவாசமானாய்
அதுமுதல்
நான்
என் இருதயத்தில்
சுவாசிக்கிறேன்

Friday, January 8, 2010

கவிதை ..

நீ
இல்லை என்று
சொல்லி உதடு கடிப்பாய்
ஆயிரம் கவிதைகள்
வந்துப்போகுமடி
உன் உதடோரமாய்.

தனிமை ..


என்
வெறுமையான இரவுகளில்
உன் நினைவுகளோடு
அர்த்தமாகிபோகிறது இரவு..

அழகி..


அதென்ன
நீ மட்டும்
உனக்கானக் காலணிகளை
பூக்கடையில்
தேடுகிறாய்

ஒருதலைக்காதல்..

நான்
மூடிமறைத்தக் காதல்
மறுபடியும்
எனது கல்லறையில்
பூச்செடிகளாக

விதவை.

யாருடன்
சமாதானம் பேசப்போகிறாய்
வெள்ளை உடையில்..

எந்த
அடகுக்கடையில் வைத்திருக்கிராய்
உன்
கண்ணாடி வளையல்களை..

உன்
வீட்டுக் கண்ணாடியில்
சாயமிழந்துக் கிடக்கும்
நெற்றிப்பொட்டு..


பாவம்
உன்
கூந்தலுக்கு தெரியுமா
உன்
பூ சூடாக் கலாச்சாரம்..

Thursday, January 7, 2010

என் மகள்


என் மகள்
பிறக்கப் போகும்
படுக்கையை வருடிப்
பார்க்கிறேன்
சற்றுமுன் வரைக்கும்
வண்ணத்துப் பூச்சி
இருந்த தடம்
புலப்பட்டது..

அவளுக்கென பொம்மைகள்
சேர்க்கிறேன்
எப்படியும் தன் தோழிக்கும்
வேண்டுமென கேட்பாள்
அவளுக்கும் சேர்க்கிறேன்..

இன்னமும் ஈரம் குறையாமல்
அவளுக்கான என்
முதல் முத்தம்..

கோபம்

உன்
தோழி
உன் கன்னம்
கிள்ளியதில்
அடிவானமே
சிவந்த்துப் போய்க்கிடக்கும்

நட்பு

புத்தகம் புரட்டி படம்
பார்த்து ரசிப்பது
காதல்
எழுத்திக் கூட்டியாவது படிப்பது
நட்பு